சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்...30 நாட்களில் இத்தனை லட்சம் பேர் சாமி தரிசனமா..!
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 30 நாட்களில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலை கோயில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு, பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
நாள்தோறும், 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்யும் நிலையில், மேலும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே சபரிமலை தரிசனத்திற்கு இணையதளத்தில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 452 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், தற்போதுவரை 19 லட்சத்து 38 ஆயிரத்து 452 பேர் தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
Next Story