பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிரான வழக்கு - என்ஐஏ 5-ஆவது குற்றப்பத்திரிகை தாக்கல்

x
    • பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிராக டெல்லியில் தொடுக்கப்பட்ட வழக்கில், தேசிய புலனாய்வு முகமை 5-ஆவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
  • அந்த குற்றப்பத்திரிகையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 12 தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  • மேலும், பயங்கரவாத செயலுக்கு நிதி திரட்டியதாக சென்னை, கோழிக்கோடு உள்பட நாடு முழுவதும் அந்த அமைப்புக்குச் சொந்தமான 37 வங்கி கணக்குகளையும், அமைப்புடன் தொடர்புடைய 19 பேரின் வங்கி கணக்குகளையும் தேசிய புலனாய்வு முகமை முடக்கியுள்ளது
  • . ஆயுதப் பயிற்சி அளித்து வந்தவர்களுக்கும், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மாத ஊதியம் என்ற பெயரில் தொடர்ந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
  • டெல்லி வழக்குடன் சேர்த்து இதுவரை அந்த அமைப்பைச் சேர்ந்த 105 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்