கொத்தாக இறந்து கிடக்கும் கால்நடைகள் - டெல்லியில் தண்ணீரைஅகற்றியவர்களுக்கு ஷாக்!
யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளதால், தலைநகர் டெல்லியில் வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெல்லியில் யமுனை ஆற்றின் கரையோர பகுதிகளுக்குள் 4 நாட்களுக்கு முன்பு வெள்ளம் புகுந்தது. குடியிருப்புகள், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் குளம் போன்று காட்சியளிக்கிறது. தற்போது தண்ணீர் அகற்றப்பட்டு வருவதால் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது. பிரதான சாலையான ஐடிஓ பபகுதியில் தண்ணீர் குறைந்ததால் போக்குவரத்து ஓரளவுக்கு சீரானது. ராஜ்காட் பகுதியில் தண்ணீர் அகற்றப்பட்டாலும், காந்தி சமாதிக்குள் குளம் போன்று காட்சியளிக்கிறது. இதனால் அனைத்து திசைகளிலும் மோட்டார் பம்புகள் வைத்து தண்ணீர் வெளியேற்றப்படுகின்றன. அதனை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். செங்கோட்டை பகுதியில் 90 சதவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அங்கு இறந்து கிடந்த கால்நடைகளை மாநகராட்சி அப்புறப்படுத்தியுள்ளது.