கடலூரில் பற்றி எரிந்த போலீஸ் வேன்.. என்ன காரணம்?.. டிஐஜி சொன்ன தகவல்
- பாமக சார்பில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட கடலூரில் இன்று காவல்துறை வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- கடலூரில் பாமக சார்பில் நெய்வேலி என் எல் சி நிறுவனத்தைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது... இதையடுத்து பாதுகாப்பிற்காக 7 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
- போராட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது... காஞ்சியில் இருந்து வந்திருந்த ஒரு பிரிவு காவலர்கள் நெய்வேலி வடக்குத்து பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர்.
- இன்று அதிகாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிவிரைவு படைக்கு சொந்தமான காவல்துறை வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
- ஆனால் அதற்குள் வாகனத்தின் முன் பகுதி முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது
- . இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்...
Next Story