வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி..! - சிக்கிய தேவஸ்தான ஊழியர் - வெளியான ஷாக் நியூஸ்

x

வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி..! - சிக்கிய தேவஸ்தான ஊழியர் - வெளியான ஷாக் நியூஸ்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வேலை வாங்கி தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தேவஸ்தான ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மூத்த உதவியாளராக பாலகிருஷ்ணன் என்பவர், பணிபுரிந்து வருகிறார்.

இவர், தேவஸ்தானத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பணிக்கான ஆவணங்களை போலியாக தயார் செய்தும் வழங்கியுள்ளார். இதனிடையே,

பாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்த நபர்கள், இதுதொடர்பாக, தேவஸ்தான விஜிலன்ஸ் ஊழியர்களிடம் முறையிட்டுள்ளனர்.

பின்னர், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், பாலகிருஷ்ணனை அழைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல்வேறு நபர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்தது தெரியவந்தது.

மேலும், தேவஸ்தான விஜிலென்ஸ் ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் கார் ஸ்டிக்கர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்