குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு | சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

x

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஐந்தருவியில் நான்கு கிளைகளில் தண்ணீர் சற்று அதிகமாக விழுந்தது. இதேபோன்று மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியிலும் சற்று அதிகமாகக் தண்ணீர் விழுந்ததால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகத்துடன் குளித்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்