குன்னூரை வாட்டி வதைக்கும் உறைபனி - மலை காய்கறி பயிர்கள் கருகும் நிலை

x

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், நீலகிரி மாவட்டத்தில் கடுமையான குளிர் நிலவி வருகின்றது. இந்நிலையில், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், அதிகாலை நேரங்களில் வெண் கம்பளி விரித்ததைபோல காட்சி தருகின்றன. இதனால், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட சில மலை காய்கறி பயிர்கள், கருகும் நிலை உருவாகியுள்ளது. மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்