இந்தியாவின் வித்தையை கற்க நீலகிரி வந்த ஜப்பான் நாட்டு குழு
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையை தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்துவது குறித்து ஜப்பான் நாட்டு பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர். நிலச்சரிவு, நில நடுக்கம் ஏற்படும்
இடங்களில், தொழில் நுட்பங்களுடன் நுண்ணறிவு போக்குவரத்து சேவைகள் செயல்படுத்த இந்தியா - ஜப்பான் இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது.
அதன்படி, பர்லியார் முதல் கூடலூர் கக்கனல்லா வரையிலான மலைப்பாதையில், ஜப்பான் நாட்டு அரசு பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் நிலச்சரிவு குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, விரிவாக்க பணிகள் குறித்து கோபி கோட்ட பொறியாளரிடம் விளக்கம் அளித்தனர்.
Next Story