பெருத்த டிமாண்டில் 'சமையல் ராணி'... பாக்ஸ் நிறைய தக்காளி.. பண்டல் பண்டலாக பணம் - லட்சாதிபதிகளாக மாறிய விவசாயிகள்

x

நாடு முழுவதும் சிவப்பு தங்கமாக மாறியிருக்கும் தக்காளியை பயிரிட்டிருக்கும் விவசாயிகள் லட்சாதிபதிகளாக மாறி வருகிறார்கள்... இதுகுறித்த ஒரு தொகுப்பை காணலாம்...

'சமையல் ராணி' என்று அழைக்கப்படும் தக்காளியின் விலை... சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. சைவம், அசைவம் என்ற எந்த வகையான உணவு தயாரிப்பதாக இருந்தாலும் அதில் தனியிடம் பிடிக்கும் தக்காளி இன்று சிவப்பு தங்கமாகிவிட்டது.

ரகத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும் சூழலில் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று அதிகப்பட்சமாக ஒரு கிலோ தக்காளி விலை 140 ரூபாயாக இருந்தது. நாடு முழுவதும் இதே நிலையாகவே இருக்கிறது..

இதுவே கடந்த மே மாதம் குவியல், குவியலாக தக்காளிகளை விவசாயிகள் வேதனையுடன் கொட்டிச்சென்ற சம்பவங்கள் பல... இதனால் பல விவசாயிகள் தக்காளியே வேண்டாம்பா என தக்காளி பயிரிடுவதை கைவிட்டதும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவிலிருந்து தக்காளி பிற மாநிலங்களுக்கு செல்கிறது. இந்த விலை உயர்வு ஜெட் வேகத்தில் விவசாயிகள் நிலையை உயர்த்தி வருகிறது.

20 கிலோ பாக்ஸ் தக்காளி 2 ஆயிரத்து 500 ரூபாயையும் தாண்டி விற்கும் சூழலில், தக்காளி பயிர்ட்ட விவசாயிகள் காட்டில் பண மழையாக இருக்கிறது. மகாராஷ்டிராவின் தக்காளி மண்டிகளில் கோடிகளில் வர்த்தகம் ஆகிறது. இந்த விலை உயர்வு தக்காளி விவசாயிகளுக்கு ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது.

விலை உயர்வால் தக்காளி நட்ட விவசாயிகள் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் மாறி வருகிறார்கள்.

தக்காளி விளைச்சல் அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என்ற சூழலில், விலை உயர்வால் மகிழ்ச்சியடைந்திருக்கும் விவசாயிகள், புதிகாக காய்க்கும் தக்காளி செடிகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்கள்...


Next Story

மேலும் செய்திகள்