தேங்கிய தண்ணீர் மீது கான்கிரீட்! - தரமற்ற பணியை தடுத்து நிறுத்திய மக்கள் - வீடியோ வெளியாகி பரபரப்பு
கன்னியாகுமரி அருகே தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் கான்கிரீட் கலவை கொட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கருங்கல் அருகே பத்திக்கோடு பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக பாம்பூரி வாய்க்காலில் உள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தரமில்லாமல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றாமல், அதன்மேல் கான்கிரீட் கலவையை கொட்டி தரைத்தளம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை தடுத்து நிறுத்தி, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story