இன்ஸ்பெக்டர் மீது SP- யிடம் புகார் - கரூரில் பரபரப்பு
கரூர் அருகே, அனுமதி பெறாமல் இயங்கி வந்த கல் குவாரிக்கு எதிரான போராட்டத்தில், முன்விரோதம் காரணமாக விவசாயி ஜெகநாதன் கொலை செய்யப்பட்டார்.
உயிரிழந்த ஜெகந்நாதனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி, கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சமூக செயற்பாட்டாளர் முகிலன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு, பின்னர் நேற்றிரவு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது, தன்னைக் கைது செய்த போலீசார், சிந்தாமணிப்பட்டி, குளித்தலை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும், குளித்தலை மருத்துவமனையில் வாகனத்தில் இருந்த இறங்கச் சொல்லி கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
Next Story