கல்லூரி மாணவி மீது கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய ஒருதலை காதலன்.. அப்படியே பெற்றோர் முன் வந்து நின்ற கொடூரம்
- ஆந்திராவில், காதலிக்க மறுத்த பெண்ணை அறையில் அடைத்து சித்ரவதை செய்து, கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில், பொறியியல் கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு பயிலும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அனுதீப் என்ற இளைஞர், ஒரு தலையாக காதலித்து வந்தார்.
- அவரது காதலை அந்த மாணவி ஏற்காத நிலையில், வீட்டிற்கு பலத்த காயத்துடன் வந்த மாணவி, அனுதீப் தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்ரவதை செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்
- . இதையடுத்து, மாணவியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- இச்சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், தலைமறைவாக உள்ள அனுதீப்பை தேடி வருகின்றனர்.
Next Story