வாட்ஸ்அப் குழு மூலம் கிடைத்த நிதி... அரசுப்பள்ளிக்கு "கல்வி சீர்வரிசை" - சுமந்து வந்த கிராம மக்கள்

x

சிவகங்கை மாவட்டம் அண்டக்குடி புதூரில் வாட்ஸ்அப் குழு மூலம் 2 லட்சம் ரூபாய் நிதி திரட்டி முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு கல்வி சீர் வரிசை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாளை நமதே என்ற வாட்ஸ்ஆப் குழு மூலம் முன்னாள் மாணவர்கள், கிராம மக்களிடம் 2 லட்ச ரூபாய் நிதி திரட்டி அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டது.

இந்த கல்வி சீர் வரிசையை தேங்காய் பழத் தட்டுடன் ஊர்வலமாக எடுத்து வந்த கிராம மக்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்