300 அடியில் உயிருக்கு போராடும் குழந்தை.. மீட்க போராடும் குழு - நெஞ்சை உலுக்கும் செய்தி..!
மத்தியப்பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுமியை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்தியப்பிரதேசத்தின் செஹோர் மாவட்டம், முங்காவலி கிராமத்தில், கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல், 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது சிறுமி தவறி விழுந்தது. இதையடுத்து, சிறுமியை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சிறுமிக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்படுகிறது. 100 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக் கொண்டிருப்பதால் மீட்புப் பணி தொடர்கிறது. தகவல் சேகரிக்க ரோபோவை ஆழ்துளை கிணற்றில் இறக்கி, குழந்தையின் நிலையை ஸ்கேன் செய்து தரவைச் செயலாக்கி வருவதாக, ரோபோடிக் குழுவின் பொறுப்பாளர் மகேஷ் ஆர்யா தெரிவித்தார். 12 மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மீட்பு பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.