"முதல்வரின் வாழ்த்து புது உத்வேகத்தை அளிக்கிறது" - முதல்வரிடம் வாழ்த்து பெற்ற பின் காவலர்கள் பேட்டி

x

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பாக இன்று நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பணியில் இருந்த பெண் காவலர்களை சந்தித்து அவர்களுக்கு திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களை பரிசாக வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை கூறினார். மேலும் அவர்களுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வின் போது அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்