முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

x

நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள ஏற்றுமதிக்கான தயார்நிலைக் குறியீட்டில், தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பது திமுக அரசின் சாதனை என, முதலமைச்சர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மாநிலத் தொழில் சூழலின் வலிமையையும், திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு கொள்கைகளையும் பறைசாற்றுவதாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக பணியாற்றிய அனைவரது கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்த ஸ்டாலின், வளர்ச்சிக்கும் வளமைக்கும் உகந்த சூழலை வளர்த்தெடுப்பதில் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்