புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டின் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அதன் நேரடிக்காட்சிகள்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், சென்னை புத்தக கண்காட்சி நடந்து வருகிறது, இந்த வளாகத்தில், பள்ளிக் கல்வி துறை சார்பில், சர்வதேச புத்தக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் 30 நாடுகளை சேர்ந்த புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
சர்வதேச மொழியில் வெளியாகியுள்ள இலக்கியங்களை, தமிழிலும், தமிழ் புத்தகங்களை, வெளிநாட்டு மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட, இந்த சர்வதேச புத்தக கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது
30 நாடுகளை சேர்ந்த புத்தக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்
ஒவ்வொரு அரங்கிற்கு முன்பும் எந்த நாடு என்பதை குறிக்கும் வகையில் கொடியும், நாட்டின் பெயரும் எழுதப்பட்டிருக்கும், அதேபோல் அந்த நாட்டில் என்ன புத்தகம் பிரபலமாக இருக்கிறதோ, அதனை அரங்கில் வைக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு நாட்டை சேர்ந்த புத்தகங்களும், தனித்தனி அரங்குகளில் இடம் பெற்றுள்ளன
தமிழ் மொழியில் வெளியாகியுள்ள இலக்கிய புத்தகங்களுக்கு தனி அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது
இங்கு வந்துள்ள வெளிநாட்டு எழுத்தாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள், தமிழ் புத்தகங்களை பார்த்து, அவற்றை தங்கள் மொழியில் மாற்றம் செய்வதற்கு, உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு எழுத்தாளர்கள், வாசகர்களை சந்தித்து பேசுவர். இந்த கண்காட்சியில், புத்தக விற்பனை நடக்காது
தமிழக அரசின் சார்பில், 6 கோடி ரூபாய் செலவில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது