டெல்டாவில் ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
காவிரி டெல்டா பகுதிகளில் இன்று ஆய்வு செய்வதற்காக, திருச்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்...
நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக, காவிரி டெல்டா மாவட்டங்களுங்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவருக்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
திருச்சி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று செங்கரையூர் கூழையாறு மற்றும் இருதயபுரம் நந்தியாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
Next Story