சென்னையில் துணை இல்லாத பெண்களை குறிவைத்து நடக்கும் பகீர் சமப்வம் | chennai | whatsapp
சென்னையில் துணை இல்லாத பெண்களுக்கு வாட்ஸ்- அப்பில் ஆபாச படங்களை அனுப்பி, தவறான உறவுக்கு அழைத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை வடபழனியைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார், சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற மணி, அவருக்கு உடந்தையாக இருந்த தியாகராய நகரைச் சேர்ந்த மதி என்கிற மதியழகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், அவர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக துணையில்லாத பெண்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு ஆபாச தகவல்களை அனுப்பி தவறான உறவுக்கு அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story