நீச்சல் பயிற்சியில் 7 வயது சிறுவன் பயிற்சியாளர்கள் கண்முன்னே உயிர் போன சோகம் - துடிக்கும் பெற்றோர்
- சென்னையில் பயிற்சியாளர்கள் முன்னிலையில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த 7 வயது சிறுவன், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பயிற்சியாளர்கள் மீது சிறுவனின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்
- சென்னை ஓட்டேரி அருகே முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் 7 வயது சிறுவன் தேஜஸ் குப்தா. இவர் சென்னை பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள கார்டன் பகுதியில் நீச்சல் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்.
- அங்கு சம்பவத்தன்று இரு பயிற்சியாளர்கள் முன்னிலையில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் குப்தா எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கி தத்தளித்தாக கூறப்படுகிறது.
- உடனே, சிறுவனை மீட்டு சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சியாளர்கள் அனுமதித்த நிலையில், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலே உயிரிழந்ததாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவம் தொடர்பாக, பயிற்சியாளர்களான செந்தில் மற்றும் சுமன் ஆகிய இருவர்களின் அஜாக்கிரதையால் தான் தங்களின் மகன் உயிரிழந்தார் என சிறுவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.
Next Story