"அதிக வட்டி தருவதாக ரூ.500 கோடி மோசடி" - ஹிஜாவு தலைவர் நீதிமன்றத்தில் சரண்

x
  • அதிக வட்டி தருவதாக கூறி 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில், ஹிஜாவு நிறுவனத்தின் தலைவர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

  • மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஜாவு நிறுவனம், அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் கூறி சுமார் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
  • இதுதொடர்பாக, கடந்த நவம்பர் 3-ஆம் தேதி சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நூற்றுக்கணக்கனோர் புகார் மனு அளித்தனர்.
  • இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஹிஜாவு நிறுவன உரிமையாளர்த்தின் சௌந்தர்ராஜன், நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் உட்பட 21 நிர்வாகிகள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும், அந்த நிறுவனத்தின் முகவர்களாகப் பணியாற்றிய 6 பேரைக் கைது செய்தனர்.
  • இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த சௌந்தர்ராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்