வெளுத்து வாங்கிய கனமழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் அரசு மருத்துவமனை | Tambaram

x

தொடர் கனமழை காரணமாக, சென்னை தாம்பரத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாம்பரம் சுற்றுப்புறங்களில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மேலும், அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட வெள்ள தடுப்பு சிறப்பு அதிகாரி ஜான் லூயிஸ், வெள்ள நீரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்