சென்னையில் நைட் ஷோ சென்ற சிறுவனை தூக்கி சென்று ஏரிக்குள் நிகழ்த்திய பயங்கரம்
ஆவடி, கோவில் பதாகையை சேர்ந்தவர் 15 வயது சிறுவன் சுகுமாரன். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், அருகில் உள்ள திரையரங்கிற்கு இரவில் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். படம் முடிந்து வீடு திரும்பிய சிறுவனை, வரும் வழியில் மறித்த அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், ஜெயமாரன், ஸ்டீபன் உட்பட 7 பேர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அருகில் உள்ள ஏரிக்கு சிறுவனை கடத்தி சென்ற அவர்கள், சில நாட்களுக்கு முன்பு நடந்த தகராறில் சிலரை அடையாளம் காட்ட சொல்லி மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக சிறுவனின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில், மூவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள நால்வரை தேடி வருகின்றனர்.
Next Story