அடையாறு ஆற்றில் மிதந்த மகனின் உடல்.. அது தெரியாமல் பாலம் மேல் சென்ற தந்தை..சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை, அடையாறு ஆற்றில் மர்மமான முறையில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மிதப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடலை மீட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மீட்கப்பட்ட உடல் மந்தைவெளியை சேர்ந்த ராமசந்திரன் எனவும், இவர் வேளச்சேரியில் உள்ள தனியார்
மருந்துவமனையின் கால் சென்டரில் வேலை பார்த்ததும் தெரியவந்தது. இதனிடையே, சம்பவ இடத்தில் இருந்து எடுகப்பட்ட ராமச்சந்திரனின் செல்போன் விவரங்கள் அழிக்கப்பட்டு இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வேலைக்கு சென்ற மகன் வீடு திரும்பாததால் ராமசந்திரனின் தந்தை லோகநாதன் அடையாறு பாலம் வழியாக சென்ற போது, மகனின் இருசக்கர வாகனம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து இருக்கிறார். மேலும் அதிலிருந்த எடுக்கப்பட்ட செல்போனில் உள்ள கால் லாக்ஸ் மற்றும் மெசேஜ்கள் அழிக்கப்பட்டிருப்பது குறித்து போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.