தொட்டிலில் விளையாடிய நேரம்தான்... நின்றுபோன மகனின் பேச்சு மூச்சு - வாரி அணைத்து ஓடிவந்த தாய்... சென்னை அருகே சோக சம்பவம்

x

ஆவடி அருகே வீட்டில் தொட்டிலில் விளையாடிய போது,5 வயது சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்தான்.

திருமுல்லைவாயலைச் சேர்ந்த கண்ணப்பன் - மீனா தம்பதியின் 5 வயது மகன் ஜெஷ்வந்த், வீட்டிலில் உள்ள தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தலை சுற்றி தொட்டிலில் மயங்கி கிடந்தான். தாய் மீனா அவனை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அம்பத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஜெஷ்வந்த் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திருமுல்லைவாயல் போலீசார், சிறுவன் வீட்டிற்கு சென்று சடலத்தை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்