+2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த சமையல் கலைஞரின் மகள் - அரசுக்கு கோரிக்கை வைத்த குடும்பத்தினர்
புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்த மாணவியின் மேல் படிப்பிற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சமையல் கலைஞரின் மகள் மிஜினா, நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 583 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை
பிடித்துள்ளார். தமிழ் மீது பற்று கொண்ட மாணவி மிஜினா, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு 200க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக மிஜினாவுக்கு விருப்பமான மேற்படிப்பு படிக்கவைக்க அரசு உதவ வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்..
Next Story