"என் ஆபிஸ் கதவு திறந்தே இருக்கும்" - உதயநிதியின் பேச்சால் நெகிழ்ந்த முன்னோடிகள்
திமுக கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்காக தமது சட்டமன்ற அலுவலகம் திறந்தே இருக்கும் என சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்காக தமது சட்டமன்ற அலுவலகம் திறந்தே இருக்கும் என சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபேட்டையில் நடைபெற்றது. அப்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொற்கிழி வழங்கினர்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் இந்நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இருக்கிறது என்றார். இளைஞரணி சார்பாக ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதன் மூலம் வரும் வட்டித் தொகை மூத்த முன்னோடிகளின் மருத்துவ தேவைக்காக வழங்கப்படும் என்றார்.
Next Story