இறையூர் சாதிப் பாகுபாடு விவகாரம்... ஜாமீன் மனுவை ஒத்தி வைத்த நீதிபதி

x

இறையூர் சாதிப் பாகுபாடு விவகாரம்... ஜாமீன் மனுவை ஒத்தி வைத்த நீதிபதி


புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆட்சியர் கவிதா ராமு விசாரணை செய்ய சென்றார். அவரிடம் அந்த பகுதியில் டீக்கடை ஒன்றில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதாக புகார் கூறப்பட்டது. மேலும், கோவிலுக்குள் தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் பட்டியலின மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து ஆட்சியர் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்றார். அவர்களை உள்ளே விடக் கூடாது என கோயிலில் சாமியாடிய மூதாட்டி சிங்கம்மாள் மற்றும் டீக்கடை நடத்தி வந்த மூக்கையா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்தனர். அப்போது நீதிபதி அந்த கிராமத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒரு குழுவை அமைத்தார். இந்த நிலையில் மீண்டும் இருவரின் ஜாமீன் மீதான மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. ஆய்வுக்குழு தனது அறிக்கையை நீதிபதியிடம் சமர்ப்பித்தது. தொடர்ந்து ஜாமின் மீதான விசாரணை வரும் 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்