9 பேரை காவு வாங்கிய பேருந்து விபத்து - உரிமையாளர் அதிரடி கைது

x

கேரள மாநிலம் வடக்கஞ்சேரியில் ஒன்பது பேர் உயிரிழக்க காரணமான பேருந்தின் உரிமையாளர் அருண் கைது செய்யப்பட்டார். இந்த விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து, மூன்று மாதங்களில் 19 முறை மோட்டார் வாகன விதியை மீறி அதிவேகமாக சென்றுள்ளதாக காவல்துறை கண்டறிந்துள்ளது. இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் ஜோமோன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பேருந்தின் உரிமையாளர், அருணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணித்து பலியான 3 பேருக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்