#BREAKING || குஜராத் திடீர் பயணம் ஏன்? - ஓபிஎஸ் விளக்கம்
ஓ.பன்னீர்செல்வம் திடீர் குஜராத் பயணம்
ஆதரவாளர்களுடன் குஜராத் புறப்பட்டு சென்றார்
பொங்கல் விழாவில் பங்கேற்க செல்வதாக தகவல்
குஜராத்தில் பாஜக பிரதிநிதிகளை சந்திக்க வாய்ப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீர் பயணமாக குஜராத் புறப்பட்டு சென்றார்...
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் தங்கள் தரப்பு
போட்டியிடும் என நேற்று அதிரடியாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய
அவர், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் குஜராத் தலைநகர் அமகமதாபாத் புறப்பட்டு சென்றார்.
அகமாதபாத்தில், தமிழ் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.