"Bomb முதல் AK 47 வரை தொட்டு பார்க்கலாம்" - போலீசாரின் சிறப்பு ஏற்பாடு - குவியும் மக்கள்
கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியில் கோவை மாநகர காவல் துறையின் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், கோவை மாநகர காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை கண்டறிய பயன்படுத்தப்படும் கருவிகள், புகைப்படக் கண்காட்சி மற்றும் கண்ணீர் புகை குண்டு, ட்ரோன் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் துப்பாக்கியை கையாள்வது குறித்தும் காவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். Ak 47, GAS GUN, PISTOL 9 mm, PUMP ACTION GUN உள்ளிட்ட பல ரக துப்பாக்கிகளும், Deep Search Metal Detector, Letter Bomb Detector, Explosive Vapour Detector உள்ளிட்ட பல வெடிகுண்டுகளை கண்டறிய பயன்படுத்தப்படும் கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Next Story