அரசியல் பகையால் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை...!
கொல்லப்பட்டவர் பிரபல ரவுடி பி பி ஜி டி சங்கர்… காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்.
கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பி பி ஜி டி சங்கரின் குற்றபின்னணியில் இருக்கும் வழக்குகள் ஏராளம்… படிப்படியாக ரவுடியாக வளர்ந்து வந்த சங்கர் அடுத்து அரசியலிலும் கால்பதித்துள்ளார்… வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்துள்ளார்…
சம்பவத்தன்று குன்றத்தூரில் நடந்த திருமணத்தில் கலந்துகொண்ட சங்கர் காரில் வீடுக்கு சென்றுள்ளார்.. நசரத்பேட்டை சிக்னலில் கார் நின்றுள்ளது.. அப்போது சங்கரின் காரை ஒட்டி மற்றொரு காரில் வந்த கும்பல்… சங்கரின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியிருக்கிறது. பிறகு காரிலிருந்து வெளியில் வந்தவரை ஓட ஒட விரட்டி தலையில் வெட்டிக் கொலைச் செய்திருக்கிறது.
பலரை தலைதெரிக்க ஓடவிட்ட பிபிஜிடி சங்கரையே இப்படி சிதைத்துபோட்டது யார் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.அபோது தான் சங்கருக்கும் குன்றத்தூரை சேர்ந்த பிரபல ரவுடி வைரத்திற்கும் பல வருடங்களாக பிரச்சனை இருந்தது தெரியவந்துள்ளது…சங்கரின் நண்பர் பிபிஜிடி குமார் ரியல் எஸ்டேட் பிஸ்னஸில் கொடிக்கட்டி பறந்துள்ளார்… இது ஏற்கனவே தொழில் செய்துவந்த வைரத்திற்கு வெறுப்பை உருவாக்கியிருக்கிறது. வைரமும் மற்றொரு கூட்டாளியான வெங்கடேசன் என்பவரும் சேர்ந்து பிபிஜிடி குமாரை வெட்டிக்கொலைச் செய்திருக்கிறார்கள்…