இணையத்தில் வைரலான பைக் குளியல் வீடியோ.... கெத்து காட்டியவரை கொத்தாக தூக்கிய போலீஸ்....

x

இப்டி கெத்து காட்டவும், ரொமான்ஸ் பண்ணவும், ரீல்ஸ் வீடியோ எடுத்து ட்ரெண்ட் ஆகவும் நம்ம ஊர் பசங்க இடம் பொருள் ஏவல் எல்லாம் பாக்காம கண்ட எடத்துல எல்லாத்தையும் கண்டன்ட்டு ஆக்கிடுறாங்க. அது அவங்களுக்கு குஜால்டியா குளுகுளுனு இருந்தாலும், அத பாக்குற பொதுமக்கள முகம் சுளிக்க தான் வைக்குது.. ஏன்னா இந்த வேலையெல்லாம் ட்ரைன், பஸ், பார்க்னு பப்ளிக் ப்லேஸ்யே நடக்குது.

இத எதிர்த்து சிலர் குரல் குடுத்தா, ஆடை சுதந்திரம், அந்த சுதந்திரம் இந்த சுதந்திரம் பலரும் வரிஞ்சிகட்டிட்டு வந்துடுறாங்க. அதுனால பொதுவெளியில என்ன வேணா பண்ணலாம்னு ஒரு குருட்டு தைரியம் இப்போ இருக்குற இளசுகள் மனசுல குடிகொண்டு குத்தாட்டம் போடுது. அதோட விளைவு தான் இந்த பைக் குளியல் வீடியோ.... நடுரோட்ல சன் பாத் எடுக்கும் இவர்கள் யார்...? ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டிய இவங்களுக்கு போலீஸ் கொடுத்த பனிஷ்மென்ட் என்னனு தெரிஞ்சிக்க.. ..பசங்களோட பயோடேட்டாவ கொஞ்சம் புரட்டுனோம். இப்டி வெயிலோட தாக்கம் தாங்கவே முடியாத அளவுக்கு படுபயங்கரமா இருந்ததால, மக்கள் படும் பாட்ட நகைச்சுவையா வெளிக்காட்ட நினைச்சி இருக்காரு கடலூர் மாவட்டம் பெருங்காளூர் கிராமத்த சேர்ந்த ரமணி குமார். அதுக்காக இவரு கையில எடுத்த ஆயுதம் தான் இந்த பைக் பாத்...

அக்கா மகன் சிவாவோட பக்கெட்ல தன்னிய எடுத்துட்டு பைக்ல கெளம்பி இருக்காரு. மெயின் ரோட்டுல ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டிகிட்டு போனது மட்டும் இல்லாம, வெயில் அதிகமா இருக்கு யாரும் வெளிய வராதிங்கனு சொல்லி, பைக்லயே ஒரு குளியல போட்டிருக்காரு.

இந்த வீடியோ இணையத்துல வைரலாக, இத பாத்து வைப் ஆன தஞ்சாவூர சேர்ந்த அருணாச்சலமும், பிரசன்னாவும் நம்மலும் பைக் குளியல போடுவோம்னு பக்கெட் தண்ணியோட பைக் எடுத்துட்டு தஞ்சாவூர் பஸ்டாண்ட் பக்கம் கிளம்பி இருக்காங்க. பொதுமக்கள் அதிகமா வந்து போர ரோட்ல, அருணாச்சலம் குளிச்சிட்டே வண்டி ஓட்ட அத பிரசன்னா வீடியோ எடுத்து வெளியிட்டிருக்காரு. அவங்க நெனச்ச மாதிரியே இந்த வீடியோவும் வைரலாயி இருக்கு. ஆனா அவங்க எதிர்பாக்கத ஒன்னும் நடந்துச்சி. என்னன்னா இந்த வீடியோ போலிஸ் கண்ணுலயும் சிக்கி இருக்கு. இத பாத்து கடுப்பான காவல் துறை அருணாச்சலத்தையும், பிரசன்னாவையும் தூக்கிட்டு வந்து விசாரிச்சி...பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில, ஹெல்மெட் போடாமா வண்டி ஓட்டுனதுக்கா 4 ஆயிரம் ஃபைன் போட்டு கண்டிச்சி அனுப்பி இருக்காங்க.

வைரலாகும், வைப் பண்ணனும் சொல்லிட்டு நம்ம ஊர் பசங்க பொதுமக்களுக்கு இடையூரா இருக்குறது மட்டுமில்லாம, சில நேரங்கல்ல எல்லை மீறியும் போறதா பலரும் குற்றம் சாட்டுறாங்க.


Next Story

மேலும் செய்திகள்