மாதம்12,000 வாங்கும் கூலித் தொழிலாளியை 14 கோடி வருமான வரியை கட்ட சொன்ன அதிகாரிகள் - அதிர்ந்த கூலித் தொழிலாளி

x

பீகாரில் 14 கோடி ரூபாயை வரியாக கட்டுமாறு கூலி தொழிலாளிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கர்காகார் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மனோஜ் யாதவ் வீட்டுக்கு சென்ற வருமான வரித்துறையினர் 14 கோடி ரூபாயை கட்டுமாறு கேட்டுள்ளனர். இது மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் குடும்பம் நடத்தும் மனோஜை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மனோஜ் வீட்டை பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடையுள்ளனர். ஆனால், மனோஜ் வங்கி கணக்கில் சொத்துக்கள் விற்றது தொடர்பாக கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பேசியிருக்கும் மனோஜ், கொரோனாவுக்கு முன்பு அரியானா, டெல்லி, பஞ்சாப்பில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்த போது, தனது பான் கார்டு, ஆதார் எண்ணை வாங்கிய நிறுவனங்கள் அதனை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்