20 பேர் தனி ரூமில் வைத்து தாக்குதல்? நடுரோட்டில் ரத்தம் சொட்ட நின்ற கணவன் - நியாயம் கேட்டு சாலையை மறித்த மனைவி

x

தூத்துக்குடி அண்ணா நகரில் இயங்கி வரும் தனியார் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில், தூத்துக்குடியை சேர்ந்த நவிதா என்பவர், 2 லட்சம் ரூபாய் சீட்டில் சேர்ந்து, மாத மாதம் தவணை கட்டி வந்துள்ளார். தவணை காலம் முடிந்த பின்னர், செலுத்திய தொகையை கொடுக்காமல் நிறுவனம் இழுத்தடித்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நவிதா தனது கணவர் பியோவுடன் சென்று, கட்டிய பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது, நிதி நிறுவன ஊழியர்களுக்கும் பியோவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியபோது, நிதி நிறுவன ஊழியர்கள் சராமாரியாக தாக்கியதில் பியோவின் மண்டை உடைந்து ரத்தம் சொட்ட நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அவரது மனைவி நவிதா சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, 20க்கும் மேற்பட்டோர்

தனி அறையில் வைத்து தனது கணவரை தாக்கியதாக தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த பியோவை, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்