ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் தொடர்... தமிழக அரசு ரூ.1 கோடி நிதி உதவி

x

சென்னையில் நடத்தப்பட்ட ஏ.டி.பி சேலஞ்சர் ஆடவர் டென்னிஸ் தொடருக்கு, தமிழக அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதி உதவியை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திடம் வழங்கினார். கடந்த பிப்ரவரி மாதம், ஏ.டி.பி சேலஞ்சர் டூர் 100 ஆடவர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், அரசாணையின்படி, அரசின் நிதியுதவியாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையினை, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது, டென்னிஸ் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்