தப்பியோடிய சிறைத்தண்டனை கைதி மீண்டும் கைது - பகீர் கிளப்பும் பின்னணி

x

மருத்துவமனையில் இருந்து போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பியோடிய சிறைத்தண்டனை கைதியை, போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்ற பர்மா சீனு என்பவருக்கு குற்ற வழக்கு ஒன்றில் சேலம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, திடீரென வலிப்பு ஏற்படவே, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பர்மா சீனு தப்பியோடினார். பர்மா சீனுவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், வளசரவாக்கம் பகுதியில் தனியாக நடந்து சென்று பெண்ணிடம் மர்மநபர் ஒருவர் 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக போலீசாருக்கு புகார் வந்தது. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த மர்மநபர் தப்பியோடிய பர்மா சீனு என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, வளசரவாக்கத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த பர்மா சீனுவை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்