பேஸ்புக், இன்ஸ்டா யூசரா நீங்க? அப்போ ட்விட்டரில் இனி நோ என்ட்ரி - எலான் மஸ்க்-யின் அதிரடி முடிவு

x

பிற சமூக வலைதளங்களை ஊக்கப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கணக்குகளை நீக்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளது.

எலான் மஸ்க் தலைமைப் பொறுப்பேற்றதில் இருந்தே ஒவ்வொரு நாளும் புதுப்புது விதிகளை அமல் படுத்தி வருகிறது ட்விட்டர். அந்த வகையில், பிற சமூக வலைதளங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மட்டுமே உருவாக்கப்பட்ட கணக்குகள் ட்விட்டரில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மாஸ்டோடன், ட்ரம்ப்-இன் ட்ரூத் சோசியல், ட்ரைபல், நோஸ்ட்ர் மற்றும் போஸ்ட் ஆகியவையும் அடங்கும். இவற்றைத் தவிர பிற சமூக வலைதளங்களுக்கு பாதிப்பில்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என கேள்வி கேட்டு எலான் மஸ்க் தனது பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது ட்விட்டரின் எதிர்காலத்தை நடுங்கச் செய்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்