கஞ்சா போதையில் ரவுடிகள் உலா.. போஸ்டர் ஒட்டி கடையை மூடிய வியாபாரி.. சங்கத்தினர் அதிர்ச்சி.. அடுத்து எடுத்த அதிரடி

x
  • தூத்துக்குடியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பஜார் வீதியில் கட்டுமான பொருள்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார்...
  • அவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கஞ்சா போதையில் பணம் கேட்டும், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு தொந்தரவு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது...
  • இது குறித்து முத்துராமலிங்கம் காவல்நிலையத்தில் புகாரளித்தும் காவல்துறை ஆகாஷ் மீது நடவடிக்கை எடுக்காமல், இருந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு முறை முத்துராமலிங்கம் புகார் அளிக்க வரும்போதெல்லாம் ஆகாஷை எச்சரித்து விடுவதோடு நின்றிருக்கிறது போலீசாரின் பணி..
  • இதில், காவல்துறையில் புகாரளிக்கும் அளவு விவகாரம் சென்றதால் ஆத்திரமடைந்த ஆகாஷ், முத்துராமலிங்கத்துடன் அதன் பிறகுதான் கடுமையாக நடந்து கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்...
  • இது குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியான நிலையில், விரக்தியும், ஆத்திரமும் அடைந்த முத்துராமலிங்கம், கடையின் முன்பு "கஞ்சா போதையில் உலா வரும் ரவுடிகளின் தொல்லையால் கடை கால வரையின்றி மூடப்படுகிறது" என எழுதி வைத்துவிட்டு சொந்த ஊர் சென்றுள்ளார்...
  • இந்த செய்தி வெளியே வேகமாக பரவிய நிலையில், இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், இதை இவ்வாறு விட்டால் பேராபத்தாகிவிடும் என முடிவு செய்து களத்தில் ஒன்றுபட்டு இறங்கினர்...
  • முதலில் முத்துராமலிங்கத்தை தொடர்பு கொண்டு அவருக்கு நம்பிக்கையூட்டிய சங்கத்தினர், மீண்டும் கடையை திறக்கும் மனநிலைக்கு அவரை கொண்டு வந்தனர்...

Next Story

மேலும் செய்திகள்