அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் - தமிழகத்தை பதறவைக்கும் ரெய்டுகள்
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். ஒப்பந்ததாரர்களின் லைசன்ஸ் புதுப்பிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் பிரிவு உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உதவி செயற்பொறியாளர் பாஸ்கரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
Next Story