இந்தோனேசியாவில் அடுத்த‌டுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பீதியில் உறைந்த மக்கள்

x

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


காலை 4.40 மணி அளவில் சிபருட் தீவு அருகே கடலுக்கு அடியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோளில் 6 புள்ளி 3 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து அதே பகுதியில், 60 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.54 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6 புள்ளி1ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்