திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால் ஆத்திரம்..இளைஞரால் தாய் மகளுக்கு நேர்ந்த கொடூரம்... நெல்லையை அதிரவைத்த சம்பவம்
நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தை சேர்ந்தவர் நைனார் என்பவருக்கு, மாரியம்மாள் என்ற மனைவியும், சங்கர கோமதி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அன்னை நகர் பகுதியை சேர்ந்த ராம் சுந்தர் என்பவர், சங்கர கோமதியை திருமணத்திற்கு பெண் கேட்டு சென்றதாக தெரிகிறது. ஆனால் பெண் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராம் சுந்தர், மதுபோதையில் தகராறு செய்த, அங்கிருந்த கத்திரிக்கோல் கொண்டு சரமாரியாக குத்திக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டில் வந்து பார்த்தபோது, பதட்டத்தில் ராம் சுந்தர் தப்பி ஓடி உள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சங்கர கோமதி மற்றும் அவரது தாயை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்த நிலையில், விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்த ராம் சுந்தர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.