தமிழகத்தை புரட்டி போட்ட மர்ம வழக்கு.. மசூதி முன்பு கிடந்த முதியவர் சடலம் - அச்சு அசல் அவரை போலவே.. மிரண்ட சிபிசிஐடி

x
  • கடந்த சில வாரங்களில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று, விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு...
  • ஆசிரமம் அனுமதியின்றி செயல்பட்டது.... ஆசிரமத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் பலர் காணாமல் போனது மற்றும் பெண்கள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளானது என பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது....
  • இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் கையிலெடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அன்பு ஜோதி ஆசிரமத்தின் முறைகேடுகளையும், மர்ம முடிச்சுகளையும் அவிழ்த்து விட்ட முதல் புகாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து, திருப்பூரை சேர்ந்த சபீருல்லா என்ற 70 வயது முதியவரை காணவில்லை எனக்கூறி, அமெரிக்காவில் வசித்து வரும் அவரது உறவினர் சலீம்கான், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
  • மனுவை விசாரித்த நீதிபதிகளின் உத்தரவின் பேரில், ஆசிரமத்தில் விசாரணை நடத்திய போலீசாருக்கு ஆசிரமம் உரிய அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது.
  • இதையடுத்து, ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்களின் பட்டியலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், ஆசிரமத்தில் இருந்து பலர் காணாமல் போனதை கண்டறிந்தனர்.
  • இதன்பின்னர், ஆசிரமத்தில் இருந்து அனைவரையும் மீட்ட போலீசார், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாவட்டத்தில் உள்ள பல ஆசிரமங்களில் தங்கவைத்திருந்தனர்.
  • இதையடுத்து, ஆசிரமத்தின் நிர்வாகி உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
  • இதில், காணாமல் போன முதியவர் சபீருல்லா உட்பட சிலர் பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெங்களூரு விரைந்த தனிப்படை போலீசார் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.
  • இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
  • இதில், கைது செய்யப்பட்ட 8 பேரில் முத்துமாரி மற்றும் பூபாலன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்ததாகவும், அவர்கள் மனநலம் பாதிக்கபப்ட்டவர்கள் என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்களை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், மீதமுள்ள 6 பேரிடம் விசாரணை நடத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
  • இந்நிலையில், காணாமல் போன முதியவர் சபீருல்லாவை பெங்களூருவில் தேடி வந்த தனிப்படை போலீசாருக்கு, பத்ராவதி என்னுமிடத்தில் உள்ள மசூதி முன்பு 70 வயது முதியவரின் சடலம் ஒன்று கிடைத்துள்ளது. விசாரணையில், தேடப்பட்ட வந்த சபீருல்லாவின் அங்க அடையாளங்கள், மீட்கப்பட்ட சடலத்துடன் ஒத்துப்போவதாகவும், உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
  • இந்நிலையில், முதியவரின் உறவினாரான அமெரிக்காவில் உள்ள சலீம் கான், நேரில் வந்து உடலை அடையாளம் காட்டவேண்டும் என சிபிசிஐடி அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
  • இதில், சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டுவது தொடர்பாக விளக்கமளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
  • பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மாயமான முதியவர் உயிரிழந்தாரா?... மீட்கப்பட்ட சடலம் முதியவரின் சடலம் தானா?... என பல கேள்விகளுக்கான பதில் சிபிசிஐடி போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தெரியவரும்...

Next Story

மேலும் செய்திகள்