பழனி கோயிலில் மின் இழுவை ரயில் பெட்டி பொருத்தும் பணி... ஊழியர்கள் மீது விழுந்த இரும்பு ராட்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில், மின் இழுவை ரயில் பெட்டி பொருத்தும் பணியில் இருவர் காயமடைந்தனர். பழனிக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 3 மின் இழுவை ரயில் இயக்கப்படுகிறது. 3வது மின் இழுவை ரயிலில், பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் பெட்டிகள் அமைக்கும் பணியை அறங்காவலர் குழுவினர், தங்கள் சொந்த செலவில் மேற்கொண்டுள்ளனர். இப்பணியின்போது இரும்பு ராடு விழுந்து சந்துரு, கார்த்தி ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து இணை ஆணையர் நடராஜனுடன், இந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story