இந்திய - நேபாள எல்லையில் அமித்ஷா ஆய்வு
இந்திய - நேபாள எல்லையில் உள்ள ஃபதேபூரில் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், கடினமான சூழலிலும் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதும், அவர்களின் நலனை கவனித்துக் கொள்வதும் நமது பொறுப்பு என பிரதமர் மோடி நம்புவதாக தெரிவித்தார். பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து எல்லை உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும், 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 44 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பு வீரர்களின் பங்கு மிக முக்கியமானது என்ற அவர், ஆயுதப்படைகளின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை என்றும் நாடு மறக்காது என்றார்.
Next Story