"தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

x

டெல்லியின் சூரஜ்குந்த் பகுதியில் அகில இந்திய தீப்பட்டி உற்பத்தியாளர்களுக்கான இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இதில், தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைத்ததற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், பொது வாழ்வில் இருக்கும்போது சொந்த மண்ணுக்கு செய்யும் எந்த செயல்களுக்கும் நன்றி தெரிவிப்பது தேவையில்லை என்றார். விவசாயம் செழிக்காத பூமியில் ஏழ்மை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பும், வாழ்வாதாரமும் கொடுப்பது தீப்பெட்டி தொழிற்சாலைகளே என்ற அவர், உலகளவில் சிவகாசியில் அதிகமாக தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதுடன், தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து வித உதவியும் செய்யப்படும் என்றும் உறுதி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்