8ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்.. கைதான அதிமுக கவுன்சிலர் - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைதான அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு, அடுத்த மாதம் 11ம் தேதி வரை சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி, பிரபாகர், ராஜா முகமது மற்றும் உடந்தையாக இருந்த உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜரான 5 பேருக்கும், அடுத்த மாதம் 11ம் தேதி வரை காவலை நீட்டித்து, ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்