இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக.. தேசிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்.!!

x

இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக.. தேசிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்.!!


இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கொழும்புவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு பதவி விலகவும் வலியுறுத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் முதல் நுகேகொட சந்திவரை, அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்து கொண்டதால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்