மீண்டும் ஒரு VAO-க்கு நேர்ந்த கதி.. உயிரை கையில் பிடித்து ஓடி வந்த சோகம் - தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர், விஏஓவை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓமலூர் தாலுக்கா மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரியான வினோத்குமார் என்பவர், கடந்த 18ம் தேதி, மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டதாக, டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், சித்துராஜ், விஜி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வினோத்குமார் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை சித்துராஜ் வழிமறித்துள்ளார். அப்போது, கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதுடன், செல்போனை பறித்துக் கொண்டு, அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அங்கிருந்து தப்பிய வினோத்குமார், காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த நிலையில், இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்