பைனான்ஸ் கம்பெனிக்குள் புகுந்து ஊழியரை சரமாரியாக தாக்கிய ADMK நிர்வாகி - போலீஸ் முன்னே பாய்ந்து பாய்ந்து அடித்த காட்சி

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது....

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் கஜேந்திரன். அதிமுக நிர்வாகியான இவர், மாவட்ட பண்டக கூட்டுறவு தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஆரணியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய்க்கு கஜேந்திரன் சீட்டு கட்டி வந்ததாக தெரிகிறது. இதில், கடந்த மாதம் கஜேந்திரன் வீட்டிற்கு பணம் வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டில் கஜேந்திரன் இல்லாத நிலையில், அவரது குடும்பத்தினரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் நிதி நிறுவனத்திற்கு சென்ற கஜேந்திரன், கடந்த மாதம் வீட்டிற்கு பணம் வசூலிக்க வந்தவர்கள் யார்? என கேட்டு மிரட்டியுள்ளார். இதில், நிறுவன ஊழியரை கஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமரசம் செய்து வைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதல் சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்